வெள்ளி, 29 ஜனவரி, 2021

வளர்ப்பு மகளை சீரழித்த பாதகனுக்குகடூழியச் சிறையுடன் கசையடித் தண்டனை

மலேசியாவில் வளர்ப்பு மகளிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் மலேசியத் தமிழரான பெண் நீதிபதி குணசுந்தரி.

மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடநத 2015 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற 
பெண் 2016 ம் ஆண்டு வேறு ஒரு நபரைத் திருமணம் செய்துகொண்டார்.அந்த பெண் தன் பெண் குழந்தையுடன் புதிதாகத் திருமணமான நபருடன் வசித்து வந்தார். இந்த நிலையில்,அந்த நபர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.அப்போது, தன் பெற்ற
 மகளாகப் பாவிக்க வேண்டிய தனது மனைவியின் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கியுள்ளான்.12 வயது வளர்ப்பு மகளிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி
 தொடங்கி 2020 பெப்ரவரி 24 ஆம் திகதி வரை சுமார் 105 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான். மனைவி வேலைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் வீட்டில் யாரும் இல்லாதபோது 
சிறுமியை சீரழித்துள்ளான் அந்தப்பாதகன்.இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை
 மிரட்டியும் கடுமையாக அடித்தும் உள்ளான். இந்த சூழலில் அந்த சிறுமிக்குத் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட, அந்த சிறுமியின் அத்தை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி தன் அத்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி 
கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியின் தாயும், அத்தையும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதுகுறித்த
 வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என்று
 அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.
 இந்த வழக்கு 
விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு 
குற்றத்திற்கும் 100 ஆண்டு சிறை, 2 பிரம்படி வீதம் தண்டனை வழங்கப்பட்டது.சுமார் 5 மணி நேரம் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய பெண் நீதிபதியான குணசுந்தரி மலேசிய வாழ் தமிழர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



ஞாயிறு, 20 டிசம்பர், 2020

நாட்டில் அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

முரண்பாடுகளை கட்டுப்படுத்த நாட்டில் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது 
என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல
 தெரிவித்துள்ளார்.
எனவே, முகநூல் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தனது அமைச்சு வகுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 டிசம்பர், 2020

திருகோணமலை – தங்கநகர் நாகபூசணி அம்மன் சிலை திருட்டு

திருகோணமலை – தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கநகர் நாகதம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 29 நவம்பர், 2020

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் இளைஞன்

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து 
வெளியிடும் போது;
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்
 நேற்று 28-11-20.சனிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு 
காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார்.அதனால், தாயார் அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று 
அல்லைப்பிட்டியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா
 வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. 29-11-20.இன்று 
பி.சி.ஆர் பரிசோதனை
 அறிக்கை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

வெலிகமை பகுதியில்சிக்கியது 100 கிலோ ஹெரோயின் மூவர் கைது

மாத்தறை – வெலிகமை பகுதியில் 100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அதிரடி படையினரால்.20-11-20. இன்று மதியம் கைது
 செய்யப்பட்டனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் துன்னாலை சுற்றிவளைப்பில் நால்வர் கைது

யாழ் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை பகுதியில்.20-11-20. இன்று  அதிகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஈடுபட்டிருந்ததாக 
தெரியவருகிறது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த நால்வரையும் கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியிருந்தவர்கள் என்று 
தெரியவருகிறது.
இதன்போது இவர்களுடன் தொடர்புபட்டிருக்காத நான்கு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

கரணவாயில் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி நகை, பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட கரணவாய் கிராமத்தில் முகமூடி அணிந்த திருடர்கள் குழு ஒன்று கூரிய ஆயுதங்களுடன் பூசகர் ஒருவரின் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தினைத் திருடிச் சென்றுள்ளது.
கடந்த இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த வீட்டின் வெளிப் பகுதியில் முதியவர் ஒருவர் வழமையாக உறங்குவது வழக்கம். அவரை எழுப்பிய திருட்டுக் கும்பவர் அவரைக் கடுமையாகத் தாக்கி கதவைத் திறக்க வைத்திருக்கின்றது.
அதன் பின்னர் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் தாக்கி அவர்களையும் ஒரு இடத்தில் இருத்திவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளது.
அங்கிருந்த 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான நகை 30 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான பணம் என்பவற்றை திருடியதுடன், அதே காணியிலிருந்த மற்றொரு வீட்டையும் திறக்கச் செய்து அதன் உள்ளேயும் தேடுதல் நடத்திவிட்டு 
தப்பிச் சென்றுள்ளது.
அங்கு வந்த திருடர்கள் வாள், கத்தி உட்பட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
 தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் இரு வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரியவருகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>