இலங்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 நவம்பர், 2021

அரசாங்கம் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு 
கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நிய செலாவணி முகாமைத்துவம் காரணமாகவே டொலர் கையிருப்பு குறைந்துள்ளது.கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாட்டு நிதி மூலங்கள் குறைந்ததால், நிலைமை மேலும் பாரதூரமாக மாறியுள்ளது. டொலர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தால் டொலர்களை 
அச்சிட முடியாது.
இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

நாடு பூராக உள்ளவாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

நாடு பூராக .18-04-2021.இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை
 கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் 
 தெரிவித்துள்ளனர்.
நாடு பூராகவும் உள்ள அனைத்து வீதிகளிலும் மற்றும் அதிவேக வீதிகளின் நுழைவுகளிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

வியாழன், 8 ஏப்ரல், 2021

வெளிநாட்டு சக்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளனவா

   நாட்டில்   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் ஐந்துநாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இந்த ஐந்து நாடுகளில் வசித்த சுமார் 50 பேரை நாடுகடத்த முடிந்துள்ளது இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன ஏனையவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறியவேண்டும், விடுதலைப்புலிகளால் கூட ஒரு மணித்தியாலத்தில் எட்டு இடங்களில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நீண்டகால திட்டமில்லாமல் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது


வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிஸார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை 
கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன்,2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில்  முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் 
தெரிவித்தனர்.
 

 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

இரு குழுக்களிடையே கிளிநொச்சியில் மோதல் ஒருவர் பலி, மூவர் காயம்

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 குறித்த சம்பவம்,14-02-2021, இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.  
 கிளிநொச்சி காவல் துறை  பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது. 
 சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர் 
 சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி காவல் துறை   நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறை  முன்னெடுத்து வருகின்றனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



வியாழன், 4 பிப்ரவரி, 2021

நாட்டில் 28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு நிவாரணப் பொதி

நாட்டில் வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொதி விநியோகிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 28 வகை பொருட்களை கொள்வனவு 
செய்யலாம். லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்கள் ஊடாக நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும். இந்தத் திட்டம் வணிக அமைச்சின் முழுமையாக கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் 3 மாதங்கள் அமுலாக்கப்படும். இதற்காக, தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை 
மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்று வணிக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் மூலம் தரத்தில் சிறந்த அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் உள்ள மட்டத்தை விட குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு 
வழங்கக்கூடிய ஆற்றல் உருவாவதாக 
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஒன்றாகும். இந்தத் திட்டத்திற்கு அரச நிறுவனங்களைப் போன்று தனியார் துறையும் உதவி வழங்க முன்வந்திருப்பது சிறப்பானது என்றும் அமைச்சர் 
கூறினார்
நிலாவரை.கொம் செய்திகள் >>> 


ஞாயிறு, 20 டிசம்பர், 2020

நாட்டில் அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

முரண்பாடுகளை கட்டுப்படுத்த நாட்டில் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது 
என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல
 தெரிவித்துள்ளார்.
எனவே, முகநூல் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தனது அமைச்சு வகுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 டிசம்பர், 2020

திருகோணமலை – தங்கநகர் நாகபூசணி அம்மன் சிலை திருட்டு

திருகோணமலை – தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கநகர் நாகதம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

வெலிகமை பகுதியில்சிக்கியது 100 கிலோ ஹெரோயின் மூவர் கைது

மாத்தறை – வெலிகமை பகுதியில் 100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அதிரடி படையினரால்.20-11-20. இன்று மதியம் கைது
 செய்யப்பட்டனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 12 நவம்பர், 2020

பழைய போகம்பரை சிறைக் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

கண்டி – பழைய போகம்பரை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள்.12-11-20. இன்று காலை முதலகூரை மீதேறி போராட்டத்தில் 
ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
800 கைதிகள் உள்ள இந்த சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 11 நவம்பர், 2020

விசேட நோயளார் காவு வண்டி கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 
அவர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண 
தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் மரக்கறி சந்தையை மீண்டும் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



நாட்டில் அடுத்த ஆண்டில் அரச ஊழியர்களுக்கு கைத்தறி நெசவுத் துணி ஆடை

  நாட்டில் அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் 10-11-20.அன்று   கலந்து கொண்ட அமைச்சர் இதற்குரிய 
வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 
என தெரிவித்தார்.
இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக
 அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில், பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்-வி-கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 நவம்பர், 2020

மூன்றாம் தவணை கற்றல் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும்திறக்கப்படும்

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப் படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, கொவிட் 19 கொரோனா தொற்று சூழ்நிலை யைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நவம்பர் 15 முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ள தாகவும், அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு
 தெரிவித்துள்ளது.
மேலும் நாடு தழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலை களுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் 
ஜி.எல் பீரிஷ் தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 29 அக்டோபர், 2020

நாட்டில் வீட்டிலிருந்து வேலை” மேல் மாகாணத்தில் அமுல்

நாட்டில் மேல் மாகாணத்தில் அரச நிறுவனங்களில் “வீட்டிலிருந்து வேலை” நடைமுறையை அமுல்படுத்துவதற்கான சுற்றறிக்கை 
வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி செயலாளர பி.வி.ஜயசுந்தரவால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஊரடங்கு உத்தரவு மேலும் 3 பொலிஸ் பகுதிகளில் அமுலாக்கப்பட்டுள்ளது

காெழும்பு – மொரட்டுவை, ஹோமாகமை மற்றும் களுத்துறை பாணந்துறை பொலிஸ் பகுதிகளில்.27-10-20. இன்று உடன் 
அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு 
அமுலாக்கப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 அக்டோபர், 2020

இனி தொற்றாளியுடன் தொடர்புடையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனிமேல் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ 
தளபதி சவேந்திர சில்வா, 26-10-20. இன்று முதல்
 அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் கூறினா

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பமுனுகமவில் புளுமென்டல் சங்கவின் மனைவி, மகன் கைது

புளுமென்ட்ல் சங்கவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர்.26-10-20. இன்று பமுனுகமவில் வைத்து கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 2 மில்லியன் ரூபாய் பணமும் சந்தேக நபர்களிடமிருந்து 
மீட்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >



ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கொழும்பு கோட்டையில் இருந்து பஸ்கள் பயணிக்காது

கொழும்பு – கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரசபேருந்து சேவைகளை.25-10-20. இன்று மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை 
உள்ளிட்ட பகுதிகளில்
 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக
 குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 24 அக்டோபர், 2020

பாரிய சர்ச்சை இலங்கையின் முதல் பெண் விமானி முஸ்லிமா தமிழா சிங்களமா???

சமூக வலைத்தளங்களிலும், சில இணையங்களிலும் செய்தியை வேகமாக பரப்புகின்றோம், வேகமாக பகிர்கின்றோம் என்ற ஆர்வக்கோளாறில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை செய்திகளை 
வெளியிடும், அதனை உண்மையா? பொய்யா? சரியா? பிழையா? என சற்றும் சிந்திக்காமல் சமூகங்களுக்கிடையில் 
முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
வேகமாக செய்திகளை அறிந்துகொள்ள வேண்டுமென வாசகர்களிடமிருக்கும் ஆர்வம், அதன் உண்மைத்தன்மையை அறிந்து 
கொள்வதில் இல்லை.
இப்படியான சம்பவமொன்றுதான் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, சில இணைய செய்தி தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே செய்தியை முரண்பாட்டுடன் உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு மக்களை 
குழப்பி வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் முதன் முதலில் விமானியாகும் யுவதி என்ற தலைப்பில் இலங்கையை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட அனுஷா சிறிரத்னா இலங்கையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள்
 வெளியிடப்பட்டிருக்கிறது.
மறுபுறம் இலங்கையில் முதல் முறையாக முஸ்லிம் பெண் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி என்ற தலைப்புக்களில் காத்தான்குடியை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயீஸ் இலங்கையின் “முதல் முஸ்லிம் பெண் விமானியானார் என செய்திகள் 
வெளியாகியிருக்கின்றன.
இந்த இவ்விரு செய்திகளிலும் ஒரே புகைப்படம்தான் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடுகின்றது.
இதன் உண்மைத்தன்மையை தற்போது எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை, வெகு விரைவில் உண்மையை உறுதிப்படுத்தி வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த செய்திகளின் உண்மையைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை தவறான செய்திகள், பதிவுகளை மற்றவர்களுக்கு பகிராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஊரடங்கு சட்டம் கொழும்பில் மேலும் ஐந்து பகுதிகளில்



காெழும்பு – மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கொச்சிக்கடை கரையோர பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் 
அமுலாக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>