ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

இரு குழுக்களிடையே கிளிநொச்சியில் மோதல் ஒருவர் பலி, மூவர் காயம்

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 குறித்த சம்பவம்,14-02-2021, இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.  
 கிளிநொச்சி காவல் துறை  பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது. 
 சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர் 
 சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி காவல் துறை   நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறை  முன்னெடுத்து வருகின்றனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



வியாழன், 4 பிப்ரவரி, 2021

நாட்டில் 28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு நிவாரணப் பொதி

நாட்டில் வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொதி விநியோகிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 28 வகை பொருட்களை கொள்வனவு 
செய்யலாம். லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்கள் ஊடாக நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும். இந்தத் திட்டம் வணிக அமைச்சின் முழுமையாக கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் 3 மாதங்கள் அமுலாக்கப்படும். இதற்காக, தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை 
மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்று வணிக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் மூலம் தரத்தில் சிறந்த அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் உள்ள மட்டத்தை விட குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு 
வழங்கக்கூடிய ஆற்றல் உருவாவதாக 
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஒன்றாகும். இந்தத் திட்டத்திற்கு அரச நிறுவனங்களைப் போன்று தனியார் துறையும் உதவி வழங்க முன்வந்திருப்பது சிறப்பானது என்றும் அமைச்சர் 
கூறினார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>