ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

நாடு பூராக உள்ளவாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

நாடு பூராக .18-04-2021.இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை
 கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் 
 தெரிவித்துள்ளனர்.
நாடு பூராகவும் உள்ள அனைத்து வீதிகளிலும் மற்றும் அதிவேக வீதிகளின் நுழைவுகளிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

வியாழன், 8 ஏப்ரல், 2021

வெளிநாட்டு சக்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளனவா

   நாட்டில்   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் ஐந்துநாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இந்த ஐந்து நாடுகளில் வசித்த சுமார் 50 பேரை நாடுகடத்த முடிந்துள்ளது இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன ஏனையவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறியவேண்டும், விடுதலைப்புலிகளால் கூட ஒரு மணித்தியாலத்தில் எட்டு இடங்களில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நீண்டகால திட்டமில்லாமல் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது


வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிஸார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை 
கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன்,2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில்  முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் 
தெரிவித்தனர்.
 

 

நிலாவரை.கொம் செய்திகள் >>>