ஞாயிறு, 21 நவம்பர், 2021

அரசாங்கம் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு 
கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நிய செலாவணி முகாமைத்துவம் காரணமாகவே டொலர் கையிருப்பு குறைந்துள்ளது.கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாட்டு நிதி மூலங்கள் குறைந்ததால், நிலைமை மேலும் பாரதூரமாக மாறியுள்ளது. டொலர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தால் டொலர்களை 
அச்சிட முடியாது.
இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

நாடு பூராக உள்ளவாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

நாடு பூராக .18-04-2021.இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை
 கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் 
 தெரிவித்துள்ளனர்.
நாடு பூராகவும் உள்ள அனைத்து வீதிகளிலும் மற்றும் அதிவேக வீதிகளின் நுழைவுகளிலும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

வியாழன், 8 ஏப்ரல், 2021

வெளிநாட்டு சக்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளனவா

   நாட்டில்   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் ஐந்துநாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இந்த ஐந்து நாடுகளில் வசித்த சுமார் 50 பேரை நாடுகடத்த முடிந்துள்ளது இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன ஏனையவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறியவேண்டும், விடுதலைப்புலிகளால் கூட ஒரு மணித்தியாலத்தில் எட்டு இடங்களில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நீண்டகால திட்டமில்லாமல் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேர் கைது


வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிஸார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை 
கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன்,2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில்  முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் 
தெரிவித்தனர்.
 

 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

இரு குழுக்களிடையே கிளிநொச்சியில் மோதல் ஒருவர் பலி, மூவர் காயம்

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 குறித்த சம்பவம்,14-02-2021, இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.  
 கிளிநொச்சி காவல் துறை  பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது. 
 சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர் 
 சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி காவல் துறை   நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறை  முன்னெடுத்து வருகின்றனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



வியாழன், 4 பிப்ரவரி, 2021

நாட்டில் 28 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு நிவாரணப் பொதி

நாட்டில் வரலாற்றில் முதல் தடவையாக 28 அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொதி விநியோகிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம் உள்ளிட்ட 28 வகை பொருட்களை கொள்வனவு 
செய்யலாம். லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்கள் ஊடாக நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும். இந்தத் திட்டம் வணிக அமைச்சின் முழுமையாக கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் 3 மாதங்கள் அமுலாக்கப்படும். இதற்காக, தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை 
மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை நேற்று வணிக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் மூலம் தரத்தில் சிறந்த அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் உள்ள மட்டத்தை விட குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு 
வழங்கக்கூடிய ஆற்றல் உருவாவதாக 
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஒன்றாகும். இந்தத் திட்டத்திற்கு அரச நிறுவனங்களைப் போன்று தனியார் துறையும் உதவி வழங்க முன்வந்திருப்பது சிறப்பானது என்றும் அமைச்சர் 
கூறினார்
நிலாவரை.கொம் செய்திகள் >>> 


வெள்ளி, 29 ஜனவரி, 2021

வளர்ப்பு மகளை சீரழித்த பாதகனுக்குகடூழியச் சிறையுடன் கசையடித் தண்டனை

மலேசியாவில் வளர்ப்பு மகளிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் மலேசியத் தமிழரான பெண் நீதிபதி குணசுந்தரி.

மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடநத 2015 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற 
பெண் 2016 ம் ஆண்டு வேறு ஒரு நபரைத் திருமணம் செய்துகொண்டார்.அந்த பெண் தன் பெண் குழந்தையுடன் புதிதாகத் திருமணமான நபருடன் வசித்து வந்தார். இந்த நிலையில்,அந்த நபர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.அப்போது, தன் பெற்ற
 மகளாகப் பாவிக்க வேண்டிய தனது மனைவியின் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கியுள்ளான்.12 வயது வளர்ப்பு மகளிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி
 தொடங்கி 2020 பெப்ரவரி 24 ஆம் திகதி வரை சுமார் 105 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான். மனைவி வேலைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் வீட்டில் யாரும் இல்லாதபோது 
சிறுமியை சீரழித்துள்ளான் அந்தப்பாதகன்.இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை
 மிரட்டியும் கடுமையாக அடித்தும் உள்ளான். இந்த சூழலில் அந்த சிறுமிக்குத் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட, அந்த சிறுமியின் அத்தை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி தன் அத்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி 
கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியின் தாயும், அத்தையும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதுகுறித்த
 வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என்று
 அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.
 இந்த வழக்கு 
விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு 
குற்றத்திற்கும் 100 ஆண்டு சிறை, 2 பிரம்படி வீதம் தண்டனை வழங்கப்பட்டது.சுமார் 5 மணி நேரம் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய பெண் நீதிபதியான குணசுந்தரி மலேசிய வாழ் தமிழர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>