வெள்ளி, 23 அக்டோபர், 2020

யாழ் பலாலி உட்பட பல்வேறு தனிமைப்படுத்தலில் பேலியகொட சந்தை வியாபாரிகள்

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் அங்கிருந்த 863 பேர் வரையானோர் யாழ்ப்பாணம் உட்பட இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPOC) இன்று வெளியிட்ட அறிக்கையில் ,
தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 863 பேரில் 180 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 150 குண்டசால தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 192 மட்டக்களப்பு கம்பஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 85 பேர் யாழ்ப்பாணத்தின் 
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்ட மையம்,110 பேர் பெரியகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மற்றும் இலங்கை ராணுவத்தால் நடத்தப்படும் மற்றொரு
 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு 68 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வியாபாரிகளுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை. கொவிட்-19 பணிக்குழு இது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேலியகொட மீன் சந்தை ஒரு மினி மையமாகும், அங்கு ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வியாபாரம் செய்கிறார்கள். சந்தையில் கொரோனா தொற்றியதால் அது பரவலாக பரவக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக