ஞாயிறு, 20 டிசம்பர், 2020

நாட்டில் அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

முரண்பாடுகளை கட்டுப்படுத்த நாட்டில் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.எனவே, முகநூல் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தனது அமைச்சு வகுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

திருகோணமலை – தங்கநகர் நாகபூசணி அம்மன் சிலை திருட்டு

திருகோணமலை – தங்கநகர் இந்துக் கோயிலில் நாகபூசணி அம்மன் சிலை நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்கநகர் நாகதம்பிரான் இந்து கோயில் கூரையால் இறங்கி சிலையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சிலை திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நிலாவரை.கொம் செய்திகள் >>>...