வெள்ளி, 23 அக்டோபர், 2020

யாழ் பலாலி உட்பட பல்வேறு தனிமைப்படுத்தலில் பேலியகொட சந்தை வியாபாரிகள்

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் அங்கிருந்த 863 பேர் வரையானோர் யாழ்ப்பாணம் உட்பட இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPOC) இன்று வெளியிட்ட அறிக்கையில் ,
தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 863 பேரில் 180 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 150 குண்டசால தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 192 மட்டக்களப்பு கம்பஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கும், 85 பேர் யாழ்ப்பாணத்தின் 
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்ட மையம்,110 பேர் பெரியகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மற்றும் இலங்கை ராணுவத்தால் நடத்தப்படும் மற்றொரு
 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு 68 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வியாபாரிகளுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை. கொவிட்-19 பணிக்குழு இது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேலியகொட மீன் சந்தை ஒரு மினி மையமாகும், அங்கு ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வியாபாரம் செய்கிறார்கள். சந்தையில் கொரோனா தொற்றியதால் அது பரவலாக பரவக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.




வியாழன், 22 அக்டோபர், 2020

நாட்டில் .பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு சட்டம்

ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறித்த விடயத்தை 
தெரிவித்துள்ளார்.இது தொாடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே இன்றைய தினம் அதிகளவில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் 309 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இவர்கள் அனைவரும் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.நேற்று காலை 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க
 சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் எனவும், 6 பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 22 பேர் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, நேற்று மாலை மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில் அவர்களில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், 182 பேலியகொடை மீன் சந்தையிலிருந்தும், 75 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது
.அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2817 ஆக உயர்ந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது

 நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 6 ஜூன், 2013

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கான பாடல் ஒன்று 06.06.13

வணக்கம் இந்தக்  காணொளியை பார்வையி ட வரும் இணைய அன்பு உறவுகளே நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியாக வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது பார்வையி ட வரும் இணைய நண்பர்களே இந்தப்பாடலானது திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு
 நட்ப்புரீதியாக வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அதாவது தனது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க
ஆசைப்படுவதாக. அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் இந்தப்பாடலானது இரண்டுநாட்களில் உருவாகி காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப்பாடலை விமலும் தேவன்ராஐாவும் 
நானும் எழுதியுள்ளோம்
இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும் எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் எஸ‌்.ரி.எஸ‌் கலையம் இந்த சிறந்த சிந்தையுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவது சிறந்த பணியாக கருதுகின்றது. (குறிப்பாக)இந்தக்கலைஞன்
மிருதங்கவாத்தியத்திலும் சிறந்த ஒரு 
கலைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கலைஞன் இந்தப்பாட லைப் பாட நினைக்கவில்லை ஆனாலும் இவர் திறன் அறிந்தேன் அதனால் இவரையும் இணைத்து இப்பாடல் உருவாக்கியுள்ளேன்.இவர்கள் கலைவாழ்வு உயர வாழ்த்துக்கள். 01 ஜூன், 2013 அன்று வெளியிடப்பட்டது
நட்புடன் .ஈழத்து இசைத்தென்றல் s.தேவராசா.
வாழ்த்துக்கள் 
காணொளி இணைப்பு 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>

                                 நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
                                                 புகள் காணொளி,01
 
                         நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
                                   புகள் காணொளி,02