ஞாயிறு, 29 நவம்பர், 2020

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா அறிகுறிகளுடன் இளைஞன்

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து 
வெளியிடும் போது;
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்
 நேற்று 28-11-20.சனிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு 
காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார்.அதனால், தாயார் அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று 
அல்லைப்பிட்டியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா
 வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. 29-11-20.இன்று 
பி.சி.ஆர் பரிசோதனை
 அறிக்கை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

வெலிகமை பகுதியில்சிக்கியது 100 கிலோ ஹெரோயின் மூவர் கைது

மாத்தறை – வெலிகமை பகுதியில் 100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அதிரடி படையினரால்.20-11-20. இன்று மதியம் கைது
 செய்யப்பட்டனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் துன்னாலை சுற்றிவளைப்பில் நால்வர் கைது

யாழ் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை பகுதியில்.20-11-20. இன்று  அதிகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஈடுபட்டிருந்ததாக 
தெரியவருகிறது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த நால்வரையும் கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியிருந்தவர்கள் என்று 
தெரியவருகிறது.
இதன்போது இவர்களுடன் தொடர்புபட்டிருக்காத நான்கு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

கரணவாயில் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி நகை, பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட கரணவாய் கிராமத்தில் முகமூடி அணிந்த திருடர்கள் குழு ஒன்று கூரிய ஆயுதங்களுடன் பூசகர் ஒருவரின் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தினைத் திருடிச் சென்றுள்ளது.
கடந்த இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த வீட்டின் வெளிப் பகுதியில் முதியவர் ஒருவர் வழமையாக உறங்குவது வழக்கம். அவரை எழுப்பிய திருட்டுக் கும்பவர் அவரைக் கடுமையாகத் தாக்கி கதவைத் திறக்க வைத்திருக்கின்றது.
அதன் பின்னர் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் தாக்கி அவர்களையும் ஒரு இடத்தில் இருத்திவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளது.
அங்கிருந்த 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான நகை 30 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான பணம் என்பவற்றை திருடியதுடன், அதே காணியிலிருந்த மற்றொரு வீட்டையும் திறக்கச் செய்து அதன் உள்ளேயும் தேடுதல் நடத்திவிட்டு 
தப்பிச் சென்றுள்ளது.
அங்கு வந்த திருடர்கள் வாள், கத்தி உட்பட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
 தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸார் இரு வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரியவருகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 12 நவம்பர், 2020

பழைய போகம்பரை சிறைக் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

கண்டி – பழைய போகம்பரை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள்.12-11-20. இன்று காலை முதலகூரை மீதேறி போராட்டத்தில் 
ஈடுபட்டுள்ளனர்.
தமக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
800 கைதிகள் உள்ள இந்த சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 11 நவம்பர், 2020

விசேட நோயளார் காவு வண்டி கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவரேனும் சுகவீனமுற்றால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல விசேட நோயளார் காவு வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 
அவர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண 
தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் மரக்கறி சந்தையை மீண்டும் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



நாட்டில் அடுத்த ஆண்டில் அரச ஊழியர்களுக்கு கைத்தறி நெசவுத் துணி ஆடை

  நாட்டில் அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் 10-11-20.அன்று   கலந்து கொண்ட அமைச்சர் இதற்குரிய 
வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 
என தெரிவித்தார்.
இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக
 அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில், பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்-வி-கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>